புதியவை

சிறுவர்களுக்கு ஆபாசப்படம் காட்டியவர் கைது.


சிறுவர்களுக்கு ஆபாச படங்களை காட்டிய குற்றச்சாட்டில் 53 வயது நபரொருவரை அலவத்துகொடை பொலிஸார் சனிக்கிழமை (11) மாலை கைதுசெய்துள்ளதுடன் அவரிடமிருந்து 125க்கும் மேற்பட்ட இறுவட்டுக்கள் மற்றும் ஆபாசப்படங்கள் அடங்கிய அலைபேசி என்பவற்றையும் கைப்பற்றியுள்ளனர். தனது வீட்டிலிருக்கும் பறவைகளை பார்வையிடவென 7 மற்றும் 8  வயதுடைய சிறுவர்களை அழைத்துச் சென்றே, அவர்களுக்கு இந்நபர் ஆபாசப் படங்களைக் காட்டியுள்ளார் என பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. அக்குறணையை அண்மித்த பகுதியிலுள்ள மேற்படி சந்தேகநபர் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபர், சிலகாலம் வெளிநாட்டில் பணிபுரிந்துள்ளதாகவும் இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளதாகவும் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது. இந்நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர் 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.