புதியவை

முஹம்மது நபி (صلى الله عليه وسلم) காலத்தில் எழுதப்பட்ட உலகின் பழம்பெரும் குர்ஆன்.

முஹம்மது நபி காலத்தில் எழுதப்பட்ட உலகின் பழம்பெரும் குர்ஆன்பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் முஹம்மது நபி (صلى الله عليه وسلم) காலத்தில் கையால் எழுதப்பட்ட உலகின் மிகப் பழைமையான குர்ஆனை இங்கிலாந்தில் உள்ள பிரிமிங்கம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

´ரேடியோகார்பன்´ பரிசோதனைக்கு இந்த குர்ஆனை உட்படுத்திய ஆராய்ச்சியாளர்கள், இது கி.பி. 568 மற்றும் 645-க்கு இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டிருக்கும் என 95.4 சதவீதம் அளவுக்கு துல்லியமாக கணித்துள்ளனர். 

எனினும், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் முஹம்மது நபி (صلى الله عليه وسلم) வாழ்ந்த சமகாலத்தில் கி.பி. 570 மற்றும் 632-க்கு இடைப்பட்ட காலத்தில் இந்த குர்ஆன் எழுதப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. 

இந்த குழுவிடம் கிடைத்துள்ள அந்த குரானின் இரண்டு பக்கங்களும் பண்டைக்காலத்தில் எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்ட தோலின் மீது, அரபு மொழியின் முந்தைய மொழி வடிவமான ´ஹிஜாஸி´ மொழியில் மையினால் வசனங்களாக எழுதப்பட்டுள்ளது. 

அந்த இரு பக்கங்களிலும் குர்ஆனின் 18 முதல் 20 வரையிலான சூறாக்களின் (அத்தியாயம்) வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.