புதியவை

மனித உறுப்புக்களை விற்பனை செய்வது சட்டவிரோத செயல்!

மனித உறுப்புக்களை விற்பனை செய்வது சட்டவிரோத செயல்!
மனித உடலில் சிறுநீரகம் மற்றும் உறுப்புக்களை விற்பனை செய்வது சட்டவிரோத செயல் என பிரித்தானிய பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் சட்ட வல்லுநர் சார்லாட் எல்வேஸ் அத தெரணவிடம் தெரிவித்தார். 

இலங்கையில் நபர்களிடம் இருந்து உடல் உறுப்புக்களை விலைக்கு கொள்வனவு செய்யும் மர்ம திட்டமொன்றில் பிரித்தானிய பிரஜைகள் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது. 

முகப்புத்தகத்தை (facebook) பயன்படுத்தி இந்த திட்டம் மிகவும் சூட்சமமாக முன்னெடுக்கப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

மாற்று சுற்றுலா என்ற திட்டத்தின் கீழ் உடல் உறுப்புக்கள் 75,000 டொலருக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இத்திட்டமானது சர்வதேச மனித உரிமை மீறில் என்பதுடன் மனித கண்ணியத்திற்கு எதிரானது என்றும் பிரித்தானிய பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் சட்ட வல்லுநர் சார்லாட் எல்வேஸ் அத தெரணவிடம் தெரிவித்தார். 

இலங்கையில் மனித உறுப்புகளை திருடி வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யும் வலைத்தளம் இயங்குவதும் அதனுடன் ரசகசியமாக சில மருத்துவனைகள் தொடர்பு வைத்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இதில் பிரபல தனியார் மருத்துவனையும் முன்னாள் இலங்கை அரசின் முக்கிய பிரமுகர் ஒருவரும் தொடர்புடையதும் தெரிய வந்துள்ளது. 

இலங்கையில் மாத்தளை மற்றும் கண்டியில் செயல்பட்டு வரும் இந்த மனித உறுப்பு வர்த்தக வலைத்தளம் குறித்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

குறிப்பாக மனித உடலில் சிறுநீரகத்தை எடுத்து வெளிநாடுகளுக்கு விற்றுவருவதாக கூறப்படுகிறது. 

குறிப்பாக வறுமையில் உள்ளோரிடம் பணத்தாசை காட்டி அவர்களுக்கு சொற்ப பணத்தை கொடுத்து விட்டு அவர்களிடம் இருந்து சிறுநீரகத்தை பெற்று பெரும் லாபத்திற்கு வெளிநாட்டில் விற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இது தொடர்பில் பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.