புதியவை

ஈகைப்பெருநாள் வாழ்த்து - நாகினி


அடைக மறையோன் அடைக்கலம்!

வேண்டும் வரமும் தருவானே
வேண்டா வரமும் அருள்வானே
வேட்கை தணிக்கும் நெறியோனே
வேதன் ஒருவன் அல்லாவே!

கையில் ஏந்தும் நலமுமே
கைக்குக் கிட்டும் வரமுமே
கைப்பு நீக்கும் தனமுமே
கைமேல் கொடுக்கும் ஈகையோன்!

இல்லை என்னும் மனமற்றோன்
இருக்கும் தயாள கொடையாளன்
இன்னல் நீக்கும் கருணையான்
இயற்கை காவல் கண்ணாளன்!

நோன்பு பெருநாள் விருந்தாளன்
நோவைப் போக்கும் மருந்தாளன்
நோக்கம் இயக்கும் கரத்தாளன்
நோக்கும் அல்லா அருளாளன்!

அல்லா வேதம் தினம்ஓதி
அன்பு உண்மை நலம்பேசி
அகத்தில் தூய்மை குடியேற்றி
அடைக மறையோன் அடைக்கலமே!

"இனிய ஈகைப்பெருநாள்-ரமலான் நல்வாழ்த்துகள்"

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.