புதியவை

தடையை மீறி திறந்த பல்கலைகழக மாணவர்கள் பேரணி

இலங்கை திறந்த பல்கலைக்கழக மாணவர்களின் பாடநெறி கட்டணங்களை குறைக்குமாறு கோரி இன்றைய தினம் நடத்த திட்டதிடப்பட்டிருந்த ஆர்ப்பட்ட பேரணி மற்றும் பாதயாத்திரையை நிறுத்துமாறு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
நுகேகொட பிரதாக நீதவான் கனிஸ்க விஜேரத்ன இன்று பகல் இந்த தடையுத்தரவை பிறப்பித்தார்.

நுகேகொட பிரதி காவல்துறை அதிகாரி நீதிமன்றத்திடம் விடுத்த கோரிக்கையின் படியே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் காலத்தில் இவ்வாறான பேரணி நடத்துவதற்கு தடை விதிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரப்பட்டது.

அதன்படி, நீதிமன்றம் இவ்வாறு தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பில் மாணவர்கள் மற்றும் பேராசிரியருக்கு அறியப்படுத்துமாறும் காவல்துறையினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த தடையை பொருட்படுத்தாத திறந்த பல்கலைகழக மாணவர்கள் பேரணியாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு வரை சென்றுள்ளனர்.

இவர்கள் நாவல திறந்த பல்கலைகழகம் முதல் பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு வரை பேரணியாக சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.