புதியவை

ஏனைய செய்தி மக்களின் பொறுப்பற்ற செயல்களால் அழிந்து வரும் உலக அதிசயம் (வீடியோ இணைப்பு)

உலகுக்கு சீனாவின் அடையாளமாக விளங்கும் சீன பெருஞ்சுவர். மாறுபட்டு வரும் இயற்கை தன்மையாலும் மக்களின் பொறுப்பற்ற செயல்களாலும் அழிந்துவரும் நிலையில் உள்ளது.
சீன பெருஞ்சுவர் உலக அதிசயங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. நிலவிலிருந்து பார்த்தால் பூமியில் குறிப்பிட்ட ஒரு அடையாளமாக தெரிவது சீன பெருஞ்சுவர் மட்டுமே என்று சொல்லப்பட்டது.
அதன் பிறகு ஆய்வாளர்கள் நிலவிலிருந்து பார்க்கும்போது பூமியில் தெரிவது சீன பெருஞ்சுவர் இல்லை, அது வேறு என்ற மாற்றுக் கருத்தையும் வெளியிட்டனர்.
சீன பெருஞ்சுவர் கி.மு. 3ம் நூற்றாண்டில் கட்ட தொடங்கப்பட்டு பல மன்னர்களால் பல நூற்றாண்டுகளாக 20 ஆயிரம் கிலோ மீட்டருக்கு கட்டி முடிக்கப்பட்டது.
அதை அந்த நாட்டினுடைய பாதுகாப்பு அரணாக மிங் வம்ச மன்னர்கள் கட்டினர்.
சீன பெருஞ்சுவர் சீனாவுக்கு பெருமை சேர்க்கும் உலக அதிசயமாகவும் நெடுங்கால வரலாறுகளோடு தொடர்புடையதாக விளங்கினாலும் கொடுமைகளும் சித்ரவதைகளும் கூட சுவர் உருவாகும் போது அரங்கேறியே வந்திருக்கிறது.
சுவர் எழுப்பியவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டு வேலை வாங்கப்பட்டனர்.
பசி, தாகத்தால் சுருண்டு விழுந்து இறந்த சுவர் எழுப்பும் தொழிலார்கள், அந்த சுவருக்கே கற்களாக வைத்து கட்டப்பட்டனர்.
மன்னர்களுடைய சர்வாதிகார போக்கில் மக்கள் பட்ட துன்பங்கள் எப்படி மறைக்கப்பட்டாலும் காலம் கடந்தாவது உண்மை வெளிச்சத்துக்கு வந்தாகும்.
சீன பெருஞ்சுவர் தற்போது 30 சதவீதம் சீரழிந்து விட்டதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்தனை நூற்றாண்டுகளில் புயல், மழை போன்ற எத்தனையோ இயற்கை காரணிகளை கடந்துவந்த பெருஞ்சுவர் அவைகளாலும் சிறுகச் சிறுக பாதிப்படைவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
என்றாலும் அங்குள்ள கிராம மக்கள் அந்த சுவரின் பழமையையும் பெருமையையும் கூட கருதாமல் கற்களை பெயர்த்து எடுத்துக்கொண்டு போய் தங்களுடைய வீடுகளை கட்ட பயன்படுத்துகின்றனர்.
மேலும் ஒரு செங்கல் ரூ. 9 ஆயிரத்துக்கு விற்கவும் செய்கின்றனர் என்று பெய்ஜின் டைம்ஸ் என்ற நாளிதழும் செய்தி வெளியிட்டுள்ளது.
சுற்றுலா செல்லும் பயணிகளும் தாங்கள் சென்று வந்ததன் நினைவாக அதிலிருந்து கற்களை பெயர்த்து எடுத்துச் செல்கின்றனர்.
இதை தடுக்க அந்த அரசு உரிய முயற்சி எடுக்காவிட்டால் ஒரு உலக அதிசயமே உருக்குலைந்து போய்விடும்.
சீன பெருஞ்சுவரை அதன் பழைமையும் நீளமும்தான் அதிசயத்துக்கும் ஆச்சரியத்துக்கும் உரியதாக வைத்துள்ளது.
வான்வழி தாக்குதல் வந்துவிட்ட இந்த காலத்தில் ஒரு சுவரால் எந்த நாடும் தன்னை பாதுகாத்துக்கொள்ள முடியாது.
நாட்டை பாதுகாத்த சுவரை சில சமூக விரோதிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள சுரண்டுகின்றனர்.
அரசும் 20 ஆயிரம் கிலோமீட்டர் நீளமுள்ள சுவரை எப்படி பாதுகாப்பது என்ற சிக்கலில் சிக்கிக்கொண்டிருக்கிறது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.