புதியவை

மாற்றங்கள் - மீரா குகன- ஜெர்மன்

முகத்தில் மலரும் புன்னகை
புதிய நட்பை வென்று தரும் புதிய நட்புகள் வாழ்வில் மாற்றங்களை கொண்டு வரும்
நிலத்தில் விழும் சிறு விதை மரமாக விருட்சம் பெரும் அம்மரமே பலமரங்களாக பெருக்கெடுத்து அடர்ந்த காடாக தோற்றம் பெரும்
மூங்கிலை வருடிச்செல்லும் பூங்காற்றே ஸ்வரங்களை பிரசுவிக்கும் பல ஸ்வரங்கள் ஒன்றாக சேர்ந்து இனிய பாடலை உருவாக்கும்
நாம் எடுத்து வைக்கும் முதலடி தான் ஒரு பயணத்தின் ஆரம்பம் பல பயனங்களின் போது நாம் கற்றுக் கொள்வது வாழ்க்கை பாடங்கள் ஆகும்
ஒரு சிறு தட்டிக்கொடுப்பு முயற்சியை உருவாக்கும் பல முயற்சிகள் நம்மிடம் பல வெற்றிகளுக்கு வலிகோலும்
நம்மிடம் எழும் ஒரு சின்ன சிரிப்பு மற்றவரை தொற்றிக் கொள்ளும் அதுவே நம்மை சுற்றி உள்ளவரிடமும் மகிழ்ச்சியை உருவாக்கும்
ஒருவரிடம் நாம் காட்டும் கருணை அவருக்கு ஆறுதலை பெற்று தரும் அந்த ஆறுதலே அவரை வாட்டும் சோகத்தையே விரட்டியடிக்கும்
ஒரு சின்ன நம்பிக்கையே நாளைய வாழ்வை நிர்ணயிக்கும் நாம் துணிந்து எடுக்கும் சின்ன மாற்றம் முழு உலகத்தையே மாற்றிவிடும்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.