புதியவை

ஆமைகளை மலேசியாவிற்கு கொண்டுசெல்ல முயன்றவர் கைது.


இலங்கையிலிருந்து மலேசியாவிற்கு சட்டவிரோதமான முறையில் ஆமைகளை கொண்டு செல்ல முயன்ற நபரை கட்டுநாயக்க விமானநிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 124 ஆமைகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த ஆமைகளை காலுறைகளில் சுற்றி பயணப்பையில் மறைத்து வைத்திருந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.