புதியவை

மகனை பந்தாடிய கொடூரத்தாய்…

1437558339-3157


லண்டனில் சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்காவில் பெற்ற மகனை தாய் ஒருவர் பந்தாடிய காட்சி இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

தனது மகனை வாஷிங் மெஷினுக்குள் திணித்து அதனை புகைப்படமாக வெளியிட்ட லண்டனைச் சேர்ந்த  கர்ட்னி ஸ்டீவர்ட்டை நினைவிருக்கிறதா? அந்த தாய் தான் தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

வாஷிங் மெஷின் சம்பவத்திற்கு முன்னதாக கர்ட்டினி ஸ்டீவர்ட், லண்டனில் உள்ள சிறுவர் விளையாட்டு பூங்காவுக்கு தனது மகனை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சிறுவர்கள் குதித்து விளையாடும் பவுன்ஸ் கேஸ்டிலில் தனது மகனை தூக்கி போட்டு விளையாடி உள்ளார். குழந்தையின் காலைப் பிடித்து மெத்தையின் மேல் வீசுவதும், அதனால் குழந்தை அலறித்துடிப்பதுமான காட்சிகள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. மகிழ்ச்சிக்காக இதனை செய்ததாக கர்ட்னி ஸ்டீவர்ட் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தப் படத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பலர், கர்ட்னியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.