புதியவை

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தில் பயணப்பையிலிருந்து சடலம் மீட்பு

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தில் பயணப்பையிலிருந்து சடலம் மீட்பு
புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்திற்கு அண்மையில் பயணப் பை ஒன்றிலிருந்து சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் காலை குறித்த பையினை வியாபாரி ஒருவர் சந்தேகத்தின் பெயரில் சோதனை செய்து பார்த்த போதே இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டதா பொலிஸ் ஊடகப் பிரிவு தகவல் தெரிவித்தது.
புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் அநுராதபுரம் நோக்கி பயணிக்கும் பஸ்கள் நிறுத்தப்படும் இடத்திற்கு அண்மையிலேயே இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.