புதியவை

உலக மக்களிடமிருந்து விடைபெற்றார் அப்துல் கலாம்; அரச மரியாதையுடன் உடல் நல்லடக்கம்

உலக மக்களிடமிருந்து விடைபெற்றார் அப்துல் கலாம்; அரச மரியாதையுடன் உடல் நல்லடக்கம்
மக்களின் ஜனாதிபதி என புகழப்படும் அப்துல் கலாம் இன்றைய தினம் உலக மக்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டார்.
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் அணுவிஞ்ஞானியுமான அப்துல் கலாமின் உடல் பூரண அரச மரியாதையுடன் ராமேஸ்வரத்தில் உள்ள பேக்கரும்பு எனும் இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது உடலுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்,
முன்னதாக, மோடியும், ராகுலும் டெல்லியில் இருந்து தனித்தனியாக மதுரைக்கு விமானம் மூலம் வந்தனர். பின்னர் அங்கிருந்து ராகுல் காரில் ராமேஸ்வரம் புறப்பட்டுச் சென்றார். பிரதமர் மோடி, மதுரையிலிருந்து ஹெலிகொப்டர் மூலம் மண்டபம் வந்தடைந்தார்.
மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் நேற்று முதல் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், அரசியல் கட்சியினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை அப்துல் கலாமின் உடல் பள்ளிவாசல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு குடும்பத்தினர் சார்பில் சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது. தொழுகைக்குப் பின்னர் கலாம் உடல் நல்லடக்கத்துக்காக பேக்கரும்பு பகுதிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இறுதியாக இராணுவத்தினரின் 21 மரியாதை வேட்டுக்களுடன் கலாமின் புகழுடல் மண்ணுக்குள் விதைக்கப்பட்டது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.