புதியவை

உலகிலேயே மிகப்பெரிய தொலைநோக்கியைத் தயாரிக்கின்றது சீனா.

உலகிலேயே மிகப்பெரிய தொலைநோக்கியைத் தயாரிக்கின்றது சீனா


அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் சமீபத்தில் பூமியை போன்று மற்றொரு புதிய கிரகத்தை கண்டுபிடித்தது. கெப்லர் விண்வெளி தொலைநோக்கி  மூலம் அது கண்டறியப்பட்டது. அக்கிரகம் 1400 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது.
அதைத்தொடர்ந்து சீனா ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. அதாவது ராட்சத அளவிலான ரேடியோ தொலைநோக்கியை தயாரிக்கிறது.
வேற்று கிரகவாசிகள் இருப்பதாகவும், பூமியில் அவர்களின் நடமாட்டம் அவ்வப்போது தென்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே அவர்களை இதன் மூலம் கண்டுபிடிக்க முடியும் என அறிவித்துள்ளது.
இந்த டெலஸ்கோப் சீனாவில் குய்ஷு மாகாணத்தில் நிறுவப்படுகிறது. அதற்கான பணிகள் தொடங்கி விட்டன. தொழில்நுட்ப வல்லுனர்கள் அங்கு கூடி பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ராட்சத தொலைநோக்கி 30 கால்பந்து மைதானம் அளவில் இருக்கும். அதன் பிரதிபலிப்பான் (ரெப் லாக்டர்) மட்டும் 500 மீட்டர் அகலமானதாக வடிவமைக்கப்படுகிறது. அந்த தொலைநோக்கியில் 4,450 தகடுகள் பதிக்கப்படுகிறது.
ஒவ்வொன்றும் 11 மீட்டர் நீளம் இருக்கும். இது தயாரித்து முடிக்கப்பட்டால் உலகத்திலேயே மிகப்பெரிய தொலைநோக்கி என்ற பெருமை பெறும்.
தற்போது பெர்டோரி கோவில் ஆர்சிபோ வானிலை மையத்தில் உள்ள ரேடியோ தொலைநோக்கி மிகப்பெரியதாக உள்ளது. இது 300 மீட்டர் அகல ரெப்லாக்டருடன் உள்ளது.
இதன்மூலம் இடியின் போது அண்டவெளியில் ஏற்படும் சத்தத்தின் அளவை கணக்கிட முடியும்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.