புதியவை

பிரஜைகள் முன்னணி சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் களமிறங்கும் கிட்னண் விஜயகுமாரி

பிரஜைகள் முன்னணி சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் களமிறங்கும் கிட்னண் விஜயகுமாரி
மலையக பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தி அந்த சமூகத்தின் பல்துறைசார் அபிவிருத்திற்காக பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் சேவையாற்றிவரும் கிட்னண் விஜயகுமாரி பிரஜைகள் முன்னணி சார்பாக நுவரெலிய மாவட்ட வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
லிந்துலை வோல் றிம் குறூப் தோட்டத்தில் பிறந்த கிட்னண் விஜயகுமாரி தலவாக்கலை தமிழ் மகாவித்தியாலயத்தில் கல்வியை முடித்து விட்டு, தனது இலட்சிய கனவான மக்கள் சேவையில் இளம் வயதிலிருந்தே ஈடுபாட்டுடன் செயற்பட்டுள்ளார்.
தேயிலை கொழுந்து பறிக்கும் விஜயகுமாரி வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்காக ஓய்வு நேரங்களில் தையல் வேலைகளை மேற்கொள்வதுடன் விவசாயத்தினையும் செய்து வருகின்றார்.
இதன் காரணமாக மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்ட விஜயகுமாரி குடும்ப வாழ்க்கையில் இணைந்த பின்னரும் சமூக சேவை மீதான ஆர்வமும் உற்சாகமும் எவ்விதத்திலும் குறையவில்லை.
மகளிர் அமைப்பின் செயலாளராக உள்ள விஜயகுமாரி தோட்டப்பெண்களின் வாழ்க்கை மேம்பட்டுக்காக அரும்பாடுபட்டுவருபவர்.
மலையக மக்களின் எழுச்சிக்காகவும் அந்த சமூகத்தின் மேம்பாட்டிற்காகவும் எஞ்சிய வாழ்நாளையும் தியாகம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் மூன்று பிள்ளைகளின் தாயான விஜயகுமாரி நுவரெலியா மாட்டத்தில் பிரஜைகள் முன்னணி சார்பில் 2015 ஆம் ஆண்டு பொது தேர்லில் தற்போது களமிறங்கியுள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.