புதியவை

திவிநெகும நிதி முறைகேடு : சஜித் பிரதிவாதியல்லவென உயர்நீதிமன்றம் அறிவிப்பு

திவிநெகும நிதி முறைகேடு : சஜித் பிரதிவாதியல்லவென உயர்நீதிமன்றம் அறிவிப்பு
திவிநெகும நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாகக் குற்றஞ்சுமத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுவை, விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அமைச்சரவையை பிரதிவாதிகளாகக் கருதி முன்னெடுத்துச்செல்ல முடியாதென உயர்நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி, விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்கள் சங்கம் மற்றும் அதன் தலைவர், செயலாளர் ஆகிய தரப்பினரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
திவிநெகும நிதியைப் பயன்படுத்தி கடன் வழங்குவதை இடைநிறுத்துமாறு மனுவில் விடுக்கப்பட்டிருந்த கோரிக்கையின் பிரகாரம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்க உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
பிரதம நீதியரசர் கே. ஶ்ரீபவன், பியசாத் டெப் மற்றும் உபாலி அபேரத்ன ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஆயினும், திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகமாக செயற்பட்ட இருவருக்கும் எதிராக மாத்திரம் இந்த மனுவை தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு உயர்நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.