புதியவை

கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது.

ஐக்கிய மக்கள் சுத்திர கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று ஹெவ்லொக் மைதானத்தில் வெளியிடப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்வில் பங்குகொண்டனர்.

'நட்புறவான இனம், நவீன தேசம் மற்றும் சினேகபூர்வ 




சமூகத்திற்கான எதிர்காலத்தை உறுதிசெய்வோம்" என்ற பன்னிரு கொள்கை அம்ச விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது. 

இதேவேளை, ஐக்கிய மக்கள் சுத்திர கூட்டமைப்பின், பொதுத் தேர்தலுக்கான 'தேர்தல் விஞ்ஞாபனம்" ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று காலை கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த உள்ளிட்ட சிரேஸ்ட உறுப்பினர்கள் இன்று காலை ஜனாதிபதியின் இல்லத்திற்குச் சென்று அதனை கையளித்துள்ளனர்.

இதனிடையே, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று முற்பகல் கொழும்பு ஹெவ்லொக் மைதானத்தில் வைத்து வெளியிடப்பட்டது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.