புதியவை

இங்கிலாந்தில் நடைபெறும் தேர்தலுக்கு ஒப்பானது - பிரதமர்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் இங்கிலாந்தில் இடம்பெறும் தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஒப்பானது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சட்டங்களுக்கு உட்பட்டு தேர்தல்கள் ஆணையாளரே தீர்மானங்களை எடுக்கின்றார்.

ஜனாதிபதி எந்தவித தீர்மானங்களையும் எடுக்க மாட்டார்.

தேர்தல்கள் ஆணையாளர் சட்டங்களை செயற்படுத்துகின்றார்.

பெண்களுக்கான உரிமை பாதுகாக்கப்படும்.

தேர்தல் கூட்டங்களில் கலந்துகொண்டவர்கள் தாக்கப்படமாட்டார்கள்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோர் எங்கும் சென்று பிரச்சினைகளின்றி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடலாம்.

ஊடகத்துறையைச் சார்ந்தவர்கள் யாரும் வரலாம்.

இவையே நல்லாட்சியின் பிரதிபலன்கள் என சுட்டிக்காட்ட முடியும் என ஹங்குரான்கெத்த பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதேநேரம், சுதந்திர கூட்டமைப்பினருக்கும், ராஜபக்ஷ தரப்பினருக்கும் தேர்தல் பணிகளில் ஈடுபட அரச வாகனங்கள் இல்லை.

சமுர்த்தி அதிகாரிகளோ, காவல்துறையினரோ தேர்தலில் ஈடுபடும் கட்சிகளின் சார்பில் பணியாற்ற முடியாது.

அவர்கள் சட்டத்திற்கு சார்பாகவும், அதற்கு மதிப்பளித்தும் பணியாற்ற வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.