புதியவை

ஒரு இடமும் மிச்சமில்ல---ஜனூஸ் சம்சுதீன்


ஒரு இடம் மிச்சமில்ல
கலியாண வீடு
மைய்யத்து வீடு- பள்ளி கில்லி
ஒரு இடமும் மிச்சமில்ல
சலூன் கட பலூன் கட
சர்பத் கட சைக்கிள் கட
இறைச்சி கட இரும்புக் கட என
ஒரு இடமும் மிச்சமில்ல
பெரியம்மாட ஊடு
பேச்சி லாத்தாட விறாந்தை
பேஸ்புக்கு மண்ணாங்கட்டி
ஒரு இடமும் மிச்சமில்ல
சந்திக்கு சந்திக்கு கூடி
சக்கப் பணிய கெடந்து
சளப்பி சளப்பி- எண்ட வாப்போ
ஒரு இடமும் மிச்சமில்ல
கொம்புளையளும் கதைக்காக
மயிலாங்கா மரமாங்கா
செத்தையாம் கா பத்தையாம் கா
எண்ட கிளியாரே ஒரு இடமும் மிச்சமில்ல
அந்துளுந்த மாங்காக்கு அறுபது பேர் காவல்
என்னாஞ் செய்யப் போறாகளோ
எனக்கிண்டா தெரியா மக்காள்
ஓரஞ் சாஞ்சாலும் ஒரு இடமும் மிச்சமில்ல
கக்கூஸ்க்குள்ள மட்டும்தானில்லையாக்கும்
மத்த கண்ட நிண்ட இடமெல்லாம்
காது புழுத்து வழிய
கண் கெட்ட அரசியல் கத தான்
ஆண்டவனே ரஹ்மானே
கொஞ்சத்த வச்சிக்கிட்டு கொடுப்புக்குள்ள நடப்பு
என் சமூகத்த காப்பாத்து வாப்பா - இல்லாட்டி
எண்ட காது ரெண்டையும் செவிடாக்கு வாப்பா.

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.