புதியவை

பிரபல நடிகையின் வீட்டு நீச்சல் குளத்தில் சடலமாக மிதந்தவர் யார்?

பிரபல நடிகையின் வீட்டு நீச்சல் குளத்தில் சடலமாக மிதந்தவர் யார்?
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள, பிரபல ஹாலிவுட் நடிகை டெமி மூரின், வீட்டு நீச்சல் குளத்தில் சடலமாக மிதந்த மர்ம மனிதன் யார்? என்பது தொடர்பாக பொலிசார் விசாரித்து வருகின்றனர். 

´இன்டீஸெண்ட் ப்ரபோஸல்´, ´ஸ்ட்ரிப்டீஸ்´ உள்ளிட்ட சூப்பர்ஹிட் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள டெமி மூருக்கு அமெரிக்க இரசிகர்களிடையே ´செக்ஸ் பாம்ப்´ என்ற செல்லப்பட்டம் உண்டு. 

விவாகரத்து செய்துவிட்ட டெமி மூர் (52), லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள பிரமாண்டமான பங்களாவில் வசித்து வருகிறார். 

இந்த பங்காளாவில் தினந்தோறும் இரவுகளில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என கேளிக்கை விருந்துகள் களைகட்டி வருவது வழக்கம். டெமி மூருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் தங்களது ஆண் மற்றும் பெண் நண்பர்களுக்கு அவ்வப்போது இந்த பங்களாவில் உள்ள நீச்சல் குளத்தில் ´ஸ்விம் பார்ட்டி´ கொடுப்பதுண்டு. 

அவ்வகையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு பார்ட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை டெமி மூரின் மகள்களில் ஒருவரான தலுலா, ´இன்ஸ்டாகிராம்´ மூலம் பகிர்ந்திருந்தார். இந்நிலையில், (அமெரிக்க நேரப்படி) சனிக்கிழமை இரவு டெமி மூரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். 

உச்சகட்ட போதையில் இருந்த ஒரு விருந்தினர் நீச்சல் குளத்தின் ஆழமான பகுதிக்குள் மூழ்கி இறந்துவிட்டது கூட தெரியாமல் கூத்தும், கும்மாளமுமாக நடந்த அந்த பார்ட்டி, தற்போது சோகத்தில் முடிந்துள்ளது. 

இச்சம்பவம் நடைபெற்ற போது டெமி மூர் வெளியூருக்கு சென்றிருந்தாகவும், அவரது மகள்களில் யாரும் அப்போது வீட்டில் இல்லை என்றும் தெரியவந்துள்ளது. நீரில் மூழ்கி பலியானவரின் பெயர் ரெவெல்லர் எடெனில்சன் வேல்லே (21) என்று தெரியவந்துள்ளது. 

யாருடைய அழைப்பின் பேரில் அந்த வாலிபர் இங்கு வந்தார்? இது, விபத்து சார்ந்த மரணம்தானா? அல்லது, வேறு பின்னணி ஏதுமுண்டா? என்பது தொடர்பாக லாஸ் ஏஞ்சலஸ் நகர பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.