புதியவை

எங்கும் இலை - இலந்தை


இன்னொருவர் எங்கும் இலை
அறிவின் சிகரம், அறத்தின் பிடிப்பு
செறிந்த புலமைச் சிறப்பு – நிறைந்திங்கே
பூணுகிற நன்னெறிகள் பூத்தவரே, என்றைக்குக்
காணுவமோ அப்துல் கலாம்?
கனவு கவனமாய்க் காணுங்கள் நாடு
நனவில் சிறந்து நடக்கும்- எனச்சொல்லி
மாணவர் ம
காணுவமோ அப்துல் கலாம்.?
த்தியிலே வாழ்ந்தவரே, என்றைக்குக்
அணுசக்தி என்றாலே ஐயா எமக்குக்
கணக்காய் வரும்பேர் கலாமே- துணுக்குறவே
எம்மைவிட்டுச் சென்றுவிட்டீர், இந்தியச் செம்மைக்கே
உம்மைவிட்டால் யாரிங்கே உண்டு?
எளிமைக் கெளிமை, எழும்ஞானம், உள்ளத்
தெளிவு, சிதையாத் திறமை – உளத்தினிலே
என்றைக்கும் இந்தியர் ஏற்றமே சிந்தனையாய்
இன்னொருவர் எங்கும் இலை
இங்கே அரசியலில் எத்தனையோ மோசடிகள்
தங்குதடை இன்றித் தழைப்பதனால்- எங்கும்
பொறுப்பற்றே நம்மவர்கள் போயினரே என்று
வெறுப்புற்றுச் சென்றீரோ விண்?

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.