புதியவை

பிரஜைகள் முன்னணியின் பெண் வேட்பாளர்களுக்கு ஆளுமை திறன் பயிற்சி.

பிரஜைகள் முன்னணியின் பெண் வேட்பாளர்களுக்கு ஆளுமை திறன் பயிற்சி
வளர்ச்சியடைந்த நாடுகளிலும் மேற்குலக நாடுகளிலும் உள்ள முதிர்ச்சியடைந்த அரசியல் நாகரீகத்தை பின்பற்றும் நோக்கில் மலையக்ததை சேர்ந்த பிரஜைகள் முன்னணி வேட்பாளர்களுக்கு ஆளுமை திறன் விருத்தி குறித்து நேற்று பயிற்றுவிக்கப்பட்டது.
அடுப்பங்கரையில் முடங்கிக் கிடந்த பெண்களை பாராளுமன்றத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 11 பெண்கள் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி தேர்தலில் களம் காண்கிறார்கள்.
தலைமைப்பண்பு பொது இடங்களில் தோற்றம் பொதுக்கூட்டங்களில் உடலியல் தோற்றப்பாடு பேச்சுத்திறன் போன்றவை இவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது.
நேற்று பிரபல அழகு நிலையத்தில் முகசீரமைப்புக்கான ஒப்பனை செய்யப்பட்டது.
மலையகப் பெண்கள் பாராளுமன்றத்திற்கு செல்லும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க முயற்சியை மிகவும் வரவேற்பதாக நிலையத்தின் உரிமையாளர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
கொழுந்து பறித்து பின்னோக்கிய சமுதாய கோட்பாட்டை மாத்திரம் மையாமாகக் கொண்டவர்களாய் பெண்கள் தொடர வேண்டும் என்ற நிலை, மாற வேண்டும் என்ற இந்த பெண்களின் முயற்சிக்கு முழு ஆதரவை பலரும் வழங்கி வருகின்றனர்.
இந்த வகையில் தமது ஆளுமையின் வளர்ச்சிகளை மேம்மபடுத்துவதற்காக கொழும்பில் அமைந்துள்ள அனுஷியா அழகுக்கலை நிலையத்திற்கு இவர்கள் வருகை தந்திருந்தனர்.

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.