புதியவை

இலங்கை - பாகிஸ்தான் மூன்றாவது டெஸ்ட் இன்று : பாகிஸ்தான் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானம்


பாகிஸ்தான் - இலங்கை அணி­க­ளுக்­கி­டை­யி­லான மூன்­றா­வதும் இறு­தி­யு­மான டெஸ்ட் போட்டி கண்டி பல்­லே­க­லயில் இன்று ஆரம்­ப­மா­கின்­றது.
இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத்தீர்மானித்துள்ளது.
இப்போட்டியில் இலங்கை அணியின் ரங்கணஹேரத்துக்கும் பாகிஸ்தான் அணியின் யுனைத் கானுக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 5போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 2 இருபது ஓவர் போட்டிகளிலும் விளையாடுகின்றது.
மூன்று போட்­டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி காலியில் நடந்­தது. இந்தப் போட்­டியில் பாகிஸ்தான் அணி 10 விக்­கெட்­டுக்­களால் வெற்­றி­யீட்­டி­யது. இதற்கு பதி­லடி கொடுக்கும் வகையில் கொழும்பு சர­வ­ண­முத்து சர்­வ­தேச மைதா­னத்தில் நடை­பெற்ற இரண்­டா­வது போட்­டியில் இலங்கை அணி 7 விக்­கெட்­டுக்களால் வெற்­றி­யீட்டி அசத்­தி­யது.
இரு அணி­களும் தலா ஒவ்­வொரு போட்­டி­களில் வெற்­றி­பெற்­றுள்ள நிலையில், தொடரைக் கைப்­பற்­று­வ­தற்­கான இறு­திப்­போட்டி இன்று ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இந்தப் போட்­டியில் யார் வெற்றி பெறு­கி­றார்­களோ அவர்கள் மூன்று போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைக் கைப்­பற்­று­வார்கள். அதனால் இன்­றைய போட்டி இரு அணி­க­ளுக்கும் மிக­முக்­கியமான போட்­டி­யாகும்.
மூன்­றா­வது டெஸ்டில் நட்­சத்­திர துடுப்­பாட்ட வீரர் குமார் சங்­கக்­கர இல்­லாமல் தான் இலங்கை அணி கள­மி­றங்­கு­கி­றது. அதே­நேரம் குமார் சங்­கக்­கார எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் நடை­பெ­ற­வுள்ள இந்­திய அணிக்­கெ­தி­ரான இரண்­டா­வது டெஸ்ட் போட்­டி­யோடு ஓய்வு பெற­வுள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­கது. சங்­கா­வுக்கு பதி­லாக இந்த டெஸ்டில் உபுல் தரங்க கள­மி­றங்­கு­கின்றார்.
பாகிஸ்தான் அணியைப் பொறுத்­த­வ­ரை யில் அதே அணிதான் கள­மி­றங்­கு­கின்­றது. ஆனால் பாகிஸ்தான் அணியின் ஹபீஸ் இந்தப் போட்­டி­யிலும் விளை­யா­ட­மாட்டார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சகல துறை ஆட்­டக்­கா­ர­ரான முக­மது ஹபீஸ் காலியில் நடந்த இலங்­கைக்கு எதி­ரான முத­லா­வது டெஸ்டின் போது அவ­ரது சுழற்­பந்­து­வீச்சு சந்­தேகம் அளிக்கும் வகையில் இருப்­ப­தாக நடு­வர்கள் புகார் அளித்­தனர். இதை­ய­டுத்து அடுத்த 14 நாட்­க­ளுக்குள் அவ­ரது பந்­து­வீச்சு, ஐ.சி.சி. அங்­கீ­காரம் பெற்ற பந்­து­வீச்சு பரி­சோ­தனை மையத்தில் சோத­னைக்­குட்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்பது விதியாகும்.
சென்னையில் உள்ள ஐ.சி.சி. பந்துவீச்சு பரிசோதனை மையத்தில் பரிசோதனை செய்ய அவர் முடிவு செய்துள்ளார். அத னால் சோதனை முடியும்வரை அவர் போட்டியில் பங்கு கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.