புதியவை

திருவனத்தி லொருயாகம் யாம்செய்ய விழைகின்றோம் - கவிமாமணி எழிலவன்திருவனத்தி லொருயாகம் யாம்செய்ய விழைகின்றோம்
      தடையேதும் வாராது யாகமதைக் காத்திடவே
பெருவுளத்தால் நின்கரிய செம்மலையும் இளவலையும்
      பொருகின்ற தொழில்செய்து ாகமதை நிறைசெய்ய
திருவுளத்தால் தவறாது இருவரையும் அனுப்பிடுவீர்
      தயரதனேஎனக்கேட்டான் மன்னவனை கோசிகனும்
மருமத்தில் எரிவேலை பெரும்புண்ணில் பாய்ச்சியதாய்
      மன்னவனின் செவிவழியே கடுந்துயரம் பாய்ந்ததுவே..

தானன்று பெற்றமுனி சாபத்தின் நிகழ்வெனவே
      தன்வினையைத் தயரதனும் எண்ணியே பரிதவித்தான்
வானத்துப் பெருமகர்கள் தடைசெயல்கள் அனைத்தும்நான்
      வாராது காத்திடுவேன் புறப்படுக என்றுரைத்து
கானகத்துப் பெருவிலங்கும் அரக்கர்களும் சூழ்வனத்தில்
      காத்திடவோ ராமனுக்குப் பயிற்சிகுறை வெனவுரைத்தான்
ஞானத்துப் பெருவிளக்காம் வசிட்டரும் இடைபுகுந்து
      அனைத்துமே கோசிகனால் கற்றவன்தான் ராமனென்றான்

மழைவெள்ளம் கரைபுறண்டு கடலதனில் சேர்வதுபோல்
      மாவித்தை வெள்ளமென ராமனிடம் சேருமென்றான்
இழையோடும் சோகத்தைத் தயரதனில் ோக்கிவைத்தான்
      இறையருளால் என்றுமே ராமனுக்கு வெற்றியென்றான்
தழைத்தோங்கும் ராமன்புகழ் கோசிகனால் கீர்த்திபெறும்
      தருவிப்பாய் நம்பியுடன் வனிளவல் இலக்குவனை
விழைவோடு அனுப்பிவைப்பாய் கோசிகனின் பணிசெய்ய
      விளம்பியவவ் வசிட்டனுக்குச் செவிசாய்த்தான் தயரதனும்.தானழைத்த ராமனுடன் இலக்குவன் இருவரையும்
      தானணைத்துத் தழுவியபின் ோசிகன்பால் சேர்ப்பித்தான்
வானத்து நீள்மழைபோல் நயனங்கள் ீர்வழிய
      வனம்செல்ல இருவரையும் வருத்தமுடன் அனுப்பிவைத்தான்
ஞானத்துப் பெருமகனே இவ்விரண்டு மகர்க்கும்நீர்
      ஞானகுரு ஆயிடினும் தாய்தந்தையு மாகிடுவீர்
மோனத்துச் சுடர்விளக்காம் இருவரையும் காத்தருள்வீர்
      மனமுவந்து அனுப்புகிறேன் ஏற்றிடுவீர் என்றுரைத்தான்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.