புதியவை

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தலைவரின் அனுமதியின்றி கூடுவதற்கான தடையுத்தரவு நீடிப்பு

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு  தலைவரின் அனுமதியின்றி கூடுவதற்கான தடையுத்தரவு நீடிப்பு
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு, கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியின்றி கூட்டப்படுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணி ரி.வேரகொடவின் வேண்டுகோளுக்கு அமைய இந்த தடை உத்தரவை கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி ஹர்ஷ சேதுங்க எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி வரை நீடித்துள்ளார்
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு, கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியின்றி கூட்டப்படுவதை தடுக்குமாறு அந்தக் கட்சியின் உறுப்பினரான பிரசன்ன லோங்கஆரச்சி அண்மையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டதன் பின்னரே கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்திருந்தது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.