புதியவை

மூன்றாவது டெஸ்டில் சங்காவுக்கு பதில் தரங்க


இலங்கை -பாகிஸ்தான் அணி­க­ளுக்­கி­டை­யி­லான 3 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணி­களும் தலா ஒவ்­வொரு போட்­டி­யிலும் வென்று சமனில் உள்ள நிலையில் இன்று  கண்டி பல்­லே­க­லயில் மூன்­றா­வதும் இறு­தி­யு­மான டெஸ்ட் போட்டி நடை­பெறுகின்றது.

இதன்­படி பல்­லே­கல மைதா­னத்தில் நடை­பெறுகின்ற 3ஆவது டெஸ்ட் போட்டி தீர்க்­க­மான போட்­டி­யாக அமை­ய­வுள்­ளது. இந்­தப்­போட்­டியில் இலங்கை அணியில் ஒரு சில மாற்­றங்கள் செய்­யப்­பட்­டுள்­ளன.
பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான மூன்­றா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் உபுல் தரங்க இணைத்துக் கொள்­ளப்­பட்­டுள்ளார். இலங்கை அணியின் நட்­சத்­திர துடுப்­பாட்ட வீரர் குமார் சங்­கக்­கார இந்­தப்­போட்­டியில் விளை­யா­ட­வில்லை. அவ­ருக்கு பதி­லா­கவே உபுல் தரங்க அணியில் இணைக்­கப்­பட்­டுள்ளார்.
தனிப்­பட்ட கார­ணங்­க­ளுக்­காக பாகிஸ்தான் அணி­யு­ட­னான மூன்­றா­வது டெஸ்ட் போட்­டியில் விளையாடவில்லை என குமார் சங்­கக்­கார அறி­வித்­துள்ளார். அத்­துடன், இந்­திய அணி­யுடன் எதிர்­வரும் ஓகஸ்ட் மாதம் இடம்­பெ­ற­வுள்ள இரண்டு டெஸ்ட் போட்­டி­களில் மாத்­திரம் பங்­கு­கொள்­ள­வுள்­ள­தாக அவர் ஏற்­க­னவே அறி­வித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.
இந்­நி­லையில், இன்று கண்டி பல்­லே­க­லயில் இடம்­பெறுகின்ற மூன்­றா­வது டெஸ்ட் போட்­டியில் சங்­கா­வுக்கு பதி­லாக உபுல் தரங்க விளை­யா­டுவார் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.
உபுல் தரங்க இறுதியாக கடந்த வருடம் கொழும்பில் இடம்பெற்ற பாகிஸ்தான் அணியுட னான டெஸ்ட் போட்டியில் பங்குகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.