புதியவை

தேர்தல் தினத்தன்று நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை


தேர்தல் நடைபெறும் தினத்தன்று நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, தேர்தல் தினத்தன்றும் மறுநாளும் 24,798 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
வாக்களிப்பு நிலையங்களில் 24, 798 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவர்கள் எதிர்வரும் 16 ஆம் திகதி காலை முதல் கடமையில் ஈடுபடவுள்ளனர்.
எதிர்வரும் 16,17 மற்றும் 18 ஆம் திகதிகளில் 2885 உத்தியோகத்தர்கள் ரோந்து சேவையில் ஈடுபடவுள்ளனர். நாடு பூராகவும் 11540 உத்தியோகத்தர்கள் இவ்வாறு ரோந்து சேவையில் ஈடுபடவுள்ளனர்.
மேலும் சகல பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கும் வகையில் 161 களகத்தடுப்பு குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும், வாக்கெண்ணும் 49 நிலையங்களுக்கும் தேவையான பாதுகாப்பை பொலிஸ் திணைக்களம் வழங்கும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.