புதியவை

சுறாவிடமிருந்து தனது தோழியை காப்பாற்றிய 10 வயது சிறுமி (Photos)

சுறாவிடமிருந்து தனது தோழியை காப்பாற்றிய 10 வயது சிறுமி (Photos)

அமெரிக்காவில் சுறா மீன் தாக்கியதையும் பொருட்படுத்தாத 10 வயது சிறுமி தனது தோழியை தைரியமாக காப்பாற்றியுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநில கடற்கரையில் காலே ஷர்மாக் (10) என்ற சிறுமி தனது 6 வயது தோழியுடன் குளித்து விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது காலே ஷர்மாக்கின் வலது கால் பகுதியை சுறா மீன் கடித்துள்ளது. இதில் படுகாயமடைந்த அந்த சிறுமி, கால் முழுவதும் கிழிந்த நிலையில் இரத்தம் வழிய மிகவும் கஷ்டப்பட்டு தண்ணீரில் இருந்து வெளியே வந்து தனது தோழியை தேடி பதற்றத்துடன் கூச்சலிட்டார்.
ஆனால், அவரது தோழி கடலில் இருந்து வெளியே வரவில்லை. அந்த சுறா மீன் அப்பகுதியிலேயே சுற்றி வருவதை பார்த்த காலே, தைரியமாக மீண்டும் கடலுக்குள் சென்று தனது தோழியை காப்பாற்றி, அவரை கரைக்கு அழைத்து வந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காலேவின் வலது கால் பகுதியில் மட்டும் 90 தையல்கள் போடப்பட்டுள்ளன.

2B8E15E600000578-3206112-image-m-10_1440166756385

2B8E97A100000578-3206112-image-a-22_1440169683816

2B8E5E2800000578-3206112-image-m-8_1440166725292
2B8E5E2D00000578-3206112-image-m-9_1440166744868

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.