புதியவை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு 10 பேர் காயம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு 10 பேர் காயம்

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை 5.45 மணியளவில் மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதியின் பதினெட்டாம் கட்டை எனும் இடத்தில் விபத்து இட்மபெற்றுள்ளது.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேளாண்மை வெட்டும் இயந்திரத்தில் அந்த பாதையால் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
விபத்தில் சந்திவெளி துறையடி வீதியைச் சேர்ந்த 41 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையான அழகைய்யா ராஜேஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
இதே வேளை குருநாகல் – தம்புள்ளை பிரதான வீதியின் இப்பாகமுவ பகுதியில் லொறி ஒன்றும் டிப்பர் வாகனமும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன, நேற்று (25) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனமும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்து சம்பவித்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
விபத்தில் மூவர் காயமடைந்துள்ளதுடன் காயமடைந்தவர்கள் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பிடிகல ஹத்தக பகுதியில் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளானதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
எல்பிட்டியவிலிருந்து பெலவத்த நோக்கி பயணித்த பஸ்ஸே இவ்வாறு விபத்திற்குள்ளானதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இரத்தினபரி 2 ஆம் மைல்கல்லில் கெப் வாகனம் ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வளைவு ஒன்றில் கெப் வாகனம் திரும்ப முற்படுகையில் வாகனத்தில் பயணித்த ஒருவர் வெளியில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளார்.
நிவித்திகல பகுதியை சேர்ந்த 32 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
கெப் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் இன்று (26) மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.