
ஆப்கானிஸ்தானில் எரிவாயு நிலையமொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்கு ஆப்கானிஸ்தானின் ஹேரட் எனும் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்களில் 10 பேர் சிறுவர்கள் எனவும் உயிரிழந்த அனைவரும் அப்பகுதியில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாமில் வசிப்பவர்கள் எனவும் பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த 18 பேர் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வெடிப்புச் சம்பவம் தாக்குதலா அல்லது விபத்தா என்பது இன்னமும் கண்டறியப்படவில்லை.
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.