புதியவை

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 145 மில்லியன் பெறுமதியான தங்கம் அரசுடமையாக்கப்பட்டது

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 145 மில்லியன் பெறுமதியான தங்கம் அரசுடமையாக்கப்பட்டது

இந்த வருடம் இதுவரையான காலப் பகுதியில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட145 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தை அரசுடமையாக்கியதாக இலங்கை சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
24 சந்தர்ப்பங்களில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட தங்கம் கைப்பற்றப்பட்டதாக சுங்கப் பேச்சாளர் லெஸ்லி காமினி கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு சட்டவிரோதமாக தங்கத்தை கடத்துவதற்கான பறிமாற்ற நிலையமாக இலங்கை பயன்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனை உறுதிபடுத்திக்கொள்வதற்கான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.