புதியவை

சீனாவின் தியான்ஜி துறைமுக நகரில் இடம்பெற்ற வெடிச்சம்பவத்தில் 17 பேர் பலி

சீனாவின் தியான்ஜி துறைமுக நகரில் இடம்பெற்ற வெடிச்சம்பவத்தில் 17 பேர் பலி

சீனாவின் வடக்கு பகுதியிலுள்ள துறைமுக நகரான தியான்ஜி நகரில் ஏற்பட்ட வெடிச் சம்பவத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த வெடிச்சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துறைமுக நகரிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் ஆபத்தான இரசாயன பொருட்கள் சேமிக்கப்பட்ட கிடங்கில் வெடிச்சம்பவம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
சிதறிய கண்ணாடி துகள்களின் மூலமே அதிகளவானோர் காயமடைந்துள்ளனர்.
வெடிச் சம்பவத்தில் காயமடைந்த அனைவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
குறித்த தொழிற்சாலையிலிருந்து பாரிய புகையுடன் கூடிய சத்தம் ஏற்பட்டதை அடுத்து வெடிச் சம்பவம் குறித்து தெரியவந்துள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பான காணொளிகளும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
வெடிச் சம்பவத்தின் அதிர்வுகள், குறித்த தொழிற்சாலை, அமையப் பெற்றுள்ள இடத்தை அண்மித்த பல கிலோமீற்றர்கள் வரை உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் தியான்ஜி நகரில் பாரிய தொழிற்சாலைகள் அதிகமாக காணப்படுகின்றமை குறிபபிடத்தக்கது.
எனினும் 30 செக்கன் இடைவேளையில் 2 வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு செய்திச் சேவை ஒன்று உறுதிப்படுத்தியுள்ளது.

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.