புதியவை

18 ஓட்டங்களுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் சாதனை வீரர் சங்கா

18 ஓட்டங்களுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் சாதனை வீரர் சங்கா

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 413 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடும் இலங்கை சற்று முன்னர் வரை 2 விக்கெட் இழப்பிக்கு 47 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
டெஸ்ட் அரங்கில் தனது கடைசி இனிங்ஸில் விளையாடிய நட்சத்திர வீரரான குமார் சங்கக்கார 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
கொழும்பு பி சரா ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதல் இனிங்ஸில் இந்தியா 393 ஓட்டங்களையும், இலங்கை 306 ஓட்டங்களையும் பெற்றன.
87 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாம் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 325 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை நிறுத்தியது.
அதன்படி இலங்கை அணியின் வெற்றி இலக்கு 413 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த இலக்கை நோக்கி இரண்டாம் இனிங்ஸை ஆரம்பித்த இலங்கை 8 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது.
கௌசால் சில்வா ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.
தனது கடைசி டெஸ்ட் இனிங்ஸில் விளையாடிய குமார் சங்கக்கார துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய போது மைதானம் கரகோஷத்தால் அதிர்ந்தது.
இந்திய வீரர்களின் மரியாதைக்கு மத்திய களமிறங்கிய அவரால் 18 ஓட்டங்களையே பெற முடிந்தது.
குமார் சங்கக்கார ஆட்டமிழந்து செல்லும் காட்சி போட்டியை பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களை ஸ்தம்பிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.