புதியவை

பாகிஸ்தானுடனான டி20 தோல்வியைத் தொடர்ந்தும் தரவரிசையில் இலங்கை அணி முதலிடத்தில்

பாகிஸ்தானுடனான டி20 தோல்வியைத் தொடர்ந்தும் தரவரிசையில் இலங்கை அணி முதலிடத்தில்
20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான அணிகளின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை வெளியிட்டுள்ளது.
நடப்பு உலக சம்பியனான இலங்கை அணியுடனான இரண்டு டி20 போட்டிகளிலும் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி இந்தியாவை பின்னுக்குத்தள்ளி 3 ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான தோல்வியால் 4 புள்ளிகளை இழந்தாலும் 126 புள்ளிகளுடன் இலங்கை தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.
122 புள்ளிகளுடன் ஆஸி. 2 ஆவது இடத்திலும், 120 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 3 ஆவது இடத்திலும், 118 புள்ளிகளுடன் இந்தியா 4 ஆவது இடத்திலும் உள்ளன.
மேற்கிந்தியத் தீவுகள், தென்ஆபிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடம் வகிக்கின்றன

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.