புதியவை

2015 பொதுத்தேர்தல் : 22 தேர்தல் மாவட்டங்களுக்குமான முழுமையான தேர்தல் முடிவுகள்

2015 பொதுத்தேர்தல் : 22 தேர்தல் மாவட்டங்களுக்குமான முழுமையான தேர்தல் முடிவுகள்
மக்கள் ஆணையூடாக 196 பாராளுமன்ற உறுப்பினர்களையும் தேசியப் பட்டியலில் 29 உறுப்பினர்களையும் தெரிவு செய்வதற்காக இந்தத் தேர்தல் நடைபெற்றது.
நேற்று (17) நடைபெற்ற தேர்தல் பெறுபேறுகளுக்கு அமைய ஐக்கிய தேசியக் கட்சி 93 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. தேசியப் பட்டியல் ஊடாக 13 உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்க உள்ளனர்
அதன் பிரகாரம் ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை பொதுத் தேர்தலில் 106 ஆசனங்களைத் தனதாக்கிக் கொண்டுள்ளது.
கொழும்பு, பதுளை, கம்பஹா, கேகாலை, மாத்தளை, கண்டி, நுவரெலியா, திருகோணமலை,பொலன்னறுவை, புத்தளம் மற்றும் திகாமடுல்ல ஆகிய மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி கொண்டது.
இம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தேர்தல் மூலம் 83 ஆசனங்களை வெற்றிகொண்டது. அவர்களுக்கு தேசியப் பட்டியல் ஊடாக 12 உறுபினர்களைத் தெரிவு செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்பிரகாரம், கூட்டமைப்புக்கு 95 ஆசனங்கள் கிடைத்துள்ளன.
குருநாகல், மொனராகலை, அனுராதபுரம், காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய 8 மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றியீட்டியது.
மக்கள் விடுதலை முன்னணி இம்முறை 4 ஆசனங்களை வெற்றிகொண்டதுடன், தேசியப்பட்டியல் ஊடாக அவர்களுக்கு இரண்டு ஆசனங்கள் கிடைத்துள்ளன.
இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு 14 ஆசனங்கள் கிடைத்துள்ளதுடன், அவர்களுக்கு தேசியப் பட்டியல் ஊடாக இரண்டு ஆசனங்கள் கிடைத்துள்ளன.
அதன் பிரகாரம், அவர்கள் இம்முறை பொதுத் தேர்தலில் 16 ஆசனங்களை சுவீகரித்துக் கொண்டனர்.
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு தலா ஒரு ஆசனம் வீதம் கிடைத்துள்ளது.

வட மாகாணம் 
யாழ்ப்பாணம் :- தேர்தல் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி 5 ஆசனங்களை கைப்பாற்றியதுடன் ஈழமக்கள் ஜனநாயக கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகிய தலா ஒரு ஆசனங்களை கைப்பாற்றியுள்ளன.
வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னிதொகுதியில் இலங்கை தமிழரசுக்கட்சி 4 ஆசனங்கனை சுவீகரித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆகியன தலா 1 ஆசனங்களைப் பெற்றுள்ளன.

கிழக்கு மாகாணம்
திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி 2 ஆசனங்களைக் கைப்பற்றியதுடன் இலங்கை தமிழரசுக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியன தலா 1 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளன.
திகாமடுல்ல:-  மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி 151,013 வாக்குகளை அதிகப்படியாகப் பெற்று 4 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 89,334 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சி 45,421 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது.
மட்டக்களப்பு :- மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி 127,185 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது. ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 38,477 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தைப் பெற்றுள்ளதுடன், ஐக்கிய தேசியக் கட்சி 32,359 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தைப் பெற்றுள்ளது.

வட மத்திய மாகாணம்
அனுராதபுரம்:- மாவட்டத்தைப் பொறுத்தவரை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 5 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளதுடன் ஐக்கிய தேசிய கட்சி 4 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
பொலன்னறுவை :- மாவட்டத்தில் இம்முறை ஐக்கிய தேசிய கட்சி 3 ஆசனங்களைப் பெற்றுள்ளதுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 2 ஆசனங்களைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது

வட மேல் மாகாணம்
குருநாகல் :- மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அதிகப்படியாக 474,124 வாக்குகளைப் பெற்று 8 ஆசனங்களை சுவீகரித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 441,275 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
புத்தளம் :- மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி 5 ஆசனங்களைக் கைப்பற்றியதுடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 3 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

மத்திய மாகாணம் 
கண்டி :- மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி 440, 761 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ள அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 309, 152 வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களைப் பெற்றுள்ளது.
மாத்தளை :- மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி 3 ஆசனங்களைப் பெற்று முன்னிலை வகிப்பதுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 2 ஆசனங்களை மட்டும் சுவீகரித்துள்ளது.
நுவரெலியா :- மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி 228,920 வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 147,348 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

மேல் மாகாணம் 
கொழும்பு :- மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அதிகப்படியாக 640, 743 வாக்குகளைப் பெற்று 11 ஆசனங்களைப் பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 474,063 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன்  மக்கள் விடுதலை முன்னணி 81,391 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தைப் பெற்றுள்ளது.
கம்பஹா :- மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி 577,004 வாக்குகளைப் பெற்று 9 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 549,958 வாக்குகளைப் பெற்று 8 ஆசனங்களைப் பெற்றுள்ளது. இந்நிலையில் மக்கள் விடுதலை முன்னணி 87,880 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது.
களுத்துறை :- மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 5 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய கட்சி 4 ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி 1 ஆசனத்தையும் சுவீகரித்துள்ளன.

சப்ரகமுவ மாகாணம் 
இரத்தினபுரி :- மாவட்டத்தின் இறுதி முடிவுகளின் பிரகாரம் 6 ஆசனங்களுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு முன்னிலை வகிக்கின்றது. இந்த மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி 5 ஆசனங்களைப் பெற்றுள்ளது.
கேகாலை :- மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி 247,467 வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 227,208 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களைப் கைப்பற்றியுள்ளது.

ஊவா மாகாணம் 
8 ஆசனங்களைக் கொண்ட பதுளை தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 5 ஆசனங்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு 3 ஆசனங்களும் கிடைத்துள்ளன.
5 ஆசனங்களைக் கொண்ட மொனராகலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 3 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய கட்சி 2 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.

தென் மாகாணம் 
காலி :- மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 6 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ள அதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி 4 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.
மாத்தறை :-  மாவட்ட முடிவுகளின் படி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 5 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய கட்சி 3 ஆசனங்களையும் தம் வசப்படுத்தியுள்ளன.
ஹம்பாந்தோட்டை :- மாவட்டத்தில் 4 ஆசனங்களைப் பெற்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு முன்னிலை வகிப்பதுடன், ஐக்கிய தேசிய கட்சி 2 ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி 1 ஆசனத்தையும் பெற்றுள்ளன.


No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.