புதியவை

2100 ஆம் ஆண்டளவில் 1,120 கோடி: உலக மக்கள் தொகை வீதம் குறையாது என ஆய்வில் தகவல்

2100 ஆம் ஆண்டளவில் 1,120 கோடி: உலக மக்கள் தொகை வீதம் குறையாது என ஆய்வில் தகவல்

ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை பிரிவு இந்நூற்றாண்டின் உலக மக்கள் தொகை வீதம் குறையாது என அறிவித்துள்ளது.
2050 ஆம் ஆண்டளவில் உலக மக்கள் தொகை 970 கோடியாகவும் 2100 ஆம் ஆண்டளவில் 1,120 கோடியாகவும் இருக்கும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆசியாவின் தற்போதைய மக்கள் தொகை 440 கோடி. இது 2050 இல் 530 கோடியாக இருக்கும். அதே சமயம் 2100 இல் 490 கோடியாகக் குறையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அதிக இளைஞர்களையும் குறைந்த பிறப்பு வீதத்தையும் கொண்ட இந்தியா போன்ற வளரும் நாடுகள் இந்த நூற்றாண்டு இறுதியில் மக்கள் தொகை மூப்பை கணிசமான அளவு எதிர்கொள்ள நேரிடும் என ஐ.நா. மக்கள் தொகை பிரிவு இயக்குநர் ஜான் ஆர் வில்மோத் தெரிவித்துள்ளார்.
மக்கள் தொகை வளர்ச்சி வீதம் இந்த நூற்றாண்டின் இறுதியில் 23 சதவீதமாக இருக்கும். ஆப்பிரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளில் ஒட்டுமொத்த பிறப்பு வீதம் குறைந்துள்ளது. ஆனால், ஆசியா, லத்தீன் அமெரிக்கா, கரீபியன் நாடுகளில் 1970களில் நிகழ்ந்த குறைந்த பிறப்பு வீதத்தோடு ஒப்பிடுகையில் இது நான்கில் ஒரு பங்குதான்.
இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் மக்கள் தொகை வளர்ச்சி முடிவுக்கு வராது. ஆப்பிரிக்க சஹாரா துணைக்கண்ட பகுதியில் இன்னும் அதிவேக மக்கள் தொகைப் பெருக்கம் உள்ள நிலையில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பிறப்பு வீதம் குறைந்தாலொழிய மக்கள் தொகை வளர்ச்சி வீதம் குறையாது என ஜான் ஆர் வில்மோத் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.