புதியவை

24.ஜின்களுக்குள் நபிமார்கள் (இஸ்லாமியப்பார்வையில் உலகம்) - மிஹிந்தலை பாரிஸ்


ஜின்களின் முதலாம் நபி
ஆமிறுப்னு உமைறுப்னு ஜான்
அதன் பின்
சாகிகுபுனு பாகிகு புனு மாறிதுபுனுஜான்
என்று தொடர்ந்தது...!

ஒவ்வொரு வருடமும்
ஒருவர் வீதம்
முந்நூறு வடங்கள்
முந்நூறு நபிகளை
ஜின்களை நெறிப்படுத்தும் வண்ணம்
கண்மணிகள் பலர்
இறைவன் எண்ணம் சொன்ன வண்ணம்
உலகில் தோன்றினார்கள்...!

மனித குலத்தைப் போலவே
ஜின் இனமும்
நபிகளை ஏற்க்க மறுத்தனர்
வசைபாடி ஒன்று கூடி
அவர்களின் போதனைகளை
பொய்யென உரைத்து
போர்கள் பல தொடுத்தனர்...!
கொன்று குவித்தனர்...!

இறைவனின் உண்மைகள்
அவர்களிடத்தில் பொய்யாகிப் போன பின்தான்
மெய் படுத்த நினைத்த இறைவன்
விண்ணில் இருந்து
மண்ணில் மீண்டும் 
இறக்கி வைத்தான் ஜின்களை
கூட்டம் கூட்டமாக....

மாறு செய்யும்
ஜின் கூட்டத்தையும்
மண்ணில் கேடு விளைவிக்கும்
மற்ற இபுலீசுகளையும்
அழித்து விடும் நோக்கில்
அல்லாஹ்வின் கட்டளைகள்
மண்ணில் இறங்கியது...

பூமியில் கடும் போர்
மாறு செய்த ஜின்கூட்டமும்
கலப்புத் திருமணம் மூலம்
இழப்புக்கண்ட கூட்டமும்
இபுலீசுடன் இனைந்து கொண்டனர்...!

இறைவன் கட்டளைகளை
நிறைவேற்றும் ஜின்களும்
நிராகரிப்பு ஜின்கூட்டமும் மோதி
இறுதியில் இறைவன் நீதி
பூமியில் தேங்கியது...!

நிராகரிப்புக்கூட்டம்
தோல்வியடைந்து துரத்தியடிக்கப்பட்டனர்
இறுதியில் ஒரு இடத்தில்
ஒதுக்கிக் குவிக்கப்பட்டனர்...
ஆனாலும் கூட
இபுலீசும் அவனுடன் 
இருந்த ஜின்களும்
அல்லாஹ்வைத் தொழுதனர்...!

ஒதுக்கியடித்து
விரட்டியடித்திருக்கும் கூட்டத்தை 
இறைவன் நெருப்பை இறக்கி
எரித்து அழித்து விட்டான்...!
அதிலும் தொழுது
அழுத கூட்டத்தை வான்நோக்கி
உயர்த்திக்கொண்டான்...!

இந்த விடயத்தில்
அதிகம் வணங்கியவன் இபுலீஸ்
மீண்டும் அவன்
ஆயிரம் வருடங்கள்
ஒவ்வொரு வானிலும் தொழுது
ஒரு வலிமையில்
மறுமலர்ச்சி அடைந்தான்...
ஏழு வானமும் கண்டான்!

அல்லாஹ் இரக்கமுடையவன்
எல்லாப்படைப்பிலும்
பாவம் செய்யும் கூட்டத்தை
மண்ணித்து விடும்
மகத்துவத்தை நிகழ்த்திக்காட்டினான்
எல்லாப்படைப்புக்களுக்கும்
அல்லாஹ்வின் வல்லமைகளை காட்டினான்
இம்மை மறுமை இரண்டையும்
உண்மையென்று உறுதிப்படுத்தினான்
கண்களுக்கு புகட்டினான்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.