புதியவை

பாரிய ஊழல் மோசடி தொடர்பில் கிடைத்துள்ள 250 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

பாரிய ஊழல் மோசடி தொடர்பில் கிடைத்துள்ள 250 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

பாரிய ஊழல் மோசடி தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாடுகளில், 250 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது .
மார்ச் மாதம் ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 886 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டீ சில்வா குறிப்பிட்டுள்ளார் .
நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி திட்டத்தில் இடம் பெற்றதாக கூறப்படும் பாரிய மோசடி தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகள் நிறைவு கட்டத்தை எட்டிய்ள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .
இதனை தவிர விசேடமாக றக்னா லங்கா நிறுவனம் ,எயர் லங்கா கேட்ரிங் மற்றும் சுயாதின தொலைக்காட்சி தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்
முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் போது மக்களின் சாட்சிகளை பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளுக்காக ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.