புதியவை

இரண்டாவது டெஸ்ட்: இந்தியா 253 ஓட்டங்களால் முன்னிலை

இரண்டாவது டெஸ்ட்: இந்தியா 253 ஓட்டங்களால் முன்னிலை

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 253 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.
முதல் இன்னிங்ஸில் இந்தியா பெற்ற 393 ஓட்டங்களுக்கு பதிலளித்தாடும் இலங்கை, 3 விக்கெட் இழப்பிற்கு 140 ஓட்டங்களை இன்றைய ஆட்டநேர முடிவில் பெற்றிருந்தது.
கொழும்பு பி சரா ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் இரண்டாம் நாளான இன்று 6 விக்கெட் இழப்பிற்கு 319 ஓட்டங்களுடன் இந்தியா தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்தது.
விருத்மன் சா 19 ஓட்டங்களுடன் ஆட்டத்தை ஆரம்பித்தார்.
இன்றைய தினம் வீசப்பட்ட இரண்டாவது ஓவரில் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய விருத்மன் சா தனது இரண்டாவது டெஸ்ட் அரைச்சதத்தைக் கடந்தார்.
114 ஓவர்களை எதிர்கொண்ட இந்திய அணி 393 ஓட்டங்களைக் குவித்தது.
பந்துவீச்சில் ரங்கன ஹேரத் 4 விக்கெட்டுகளையும், தம்மிக பிரசாத், துஷ்மந்த சமீர, அணித்தலைவர் அஞ்சலோ மெத்யூஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பதிலளித்தாடும் இலங்கை ஓர் ஓட்டத்துக்கு முதல் விக்கெட்டை இழந்தது.
திமுத் கருணாரத்ன ஓர் ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.
இந்தப் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து விடைபெறவுள்ள நட்சத்திர வீரரான குமார் சங்கக்கார துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய போது ரசிகர்கள் எழுந்து நின்றும், இந்திய வீரர்கள் வரிசையாக நின்றும் மரியாதை செலுத்தினர்.
குமார் சங்கக்கார மற்றும் கௌசால் சில்வா ஜோடி இரண்டாம் விக்கெட்டுக்காக 74 ஓட்டங்களைப் பகிர்ந்ததுடன், சங்கக்காரவினால் 32 ஓட்டங்களையே பெற முடிந்தது.
கௌசால் சில்வா தனது ஒன்பதாவது டெஸ்ட் அரைச்சதத்தைப் பூர்த்திசெய்து 51 ஓட்டங்களைப் பெற்றார்.
இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 140 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
லஹிரு திரிமான்ன 28 ஓட்டங்களுடனும், அணித்தலைவர் அஞ்சலோ மெத்யூஸ் 19 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.