புதியவை

பஸ் விபத்து - 35 பேர் காயம்

பஸ் விபத்து - 35 பேர் காயம்

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புனானை பிரதேசத்தில் வைத்து பஸ் வண்டியொன்று இன்று அதிகாலை (03) விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 35 பேர் காயமடைந்துள்ளனர். 

நேற்றிரவு 11.30 அளவில் காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கிப் சென்ற தனியார் பஸ் ஒன்று டயர் வெடித்ததில் குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இதில் காயமடைந்தவர்கள் பொலனறுவை வைத்தியசாலை மற்றும் வாழைச்சேனை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். 

இது தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.