புதியவை

தடுத்து வைக்கப்பட்டிருந்த 40 இந்திய மீனவர்கள் விடுதலை

தடுத்து வைக்கப்பட்டிருந்த 40 இந்திய மீனவர்கள் விடுதலை

இரண்டு மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மீனவர்களை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுத்த இலங்கை அரசாங்கத்திற்கு இராமேஸ்வரம் மீனவர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 40 மீனவர்களும் பருத்தித்துறை மற்றும் மன்னார் நீதவான் நீதிமன்றங்களினால் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்களை மீண்டும் தமிழகத்திற்கு அனுப்பிவைப்பதற்கான ஒழுங்குகளை இலங்கைக்கான இந்திய தூதரக அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
எவ்வாறாயினும் குறித்த மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை விடுவிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை.
இந்நிலையில் தமிழக மீனவர்களின் படகுகளையும் விடுவித்து அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கம் உதவ வேண்டும் என இராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் தேவதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.