புதியவை

தரம் 5 புலமைப்பரிசில்: கருத்தரங்குகள் மீதான தடை குறித்து கல்வி அமைச்சு மீளாய்வு

தரம் 5 புலமைப்பரிசில்: கருத்தரங்குகள் மீதான தடை குறித்து கல்வி அமைச்சு மீளாய்வு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு 5 நாட்களுக்கு முன்பிருந்தே மேலதிக நேர வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகளை நடத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை கல்வி அமைச்சு மீளாய்வுக்கு உட்படுத்தியுள்ளது.
கல்வி அமைச்சரின் ஆலோசனைக்கமைய இந்த தடை மூன்று நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம், புலமைப்பரிசில் பரீட்சைக்கு மூன்று தினங்களுக்கு முன்னர் மேலதிக நேர வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் விரிவுரைக​ளை நடத்துதல், உத்தேச வினாப் பத்திரம் அச்சிடுதல், விநியோகித்தல் பரீட்சைக்கு இடையூறாக அமையாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.