புதியவை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை (23) நடைபெறவுள்ளது.
3,40,926 பரீட்சார்த்திகள் இம்முறை தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டு மொழிமூலங்களிலும் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார குறிப்பிட்டார்.
பரீட்சையை நடத்துவதற்காக நாடு முழுவதும் சுமார் 26,000 இற்கும் அதிகமான செயற்குழுவினரை ஈடுபடுத்தியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறினார்.
இதுதவிர, பரீட்சை கண்காணிப்பிற்காக மாகாண மட்டத்திலும், பரீட்சைகள் திணைக்கள மட்டத்திலும் சுமார் 500 ற்கும் அதிகமான உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.