புதியவை

குருநாகலில் உணவகத்தின் மீது தாக்குதல்: 7 பேர் கைது

குருநாகலில் உணவகத்தின் மீது தாக்குதல்:  7 பேர் கைது

குருநாகல் போதனா வைத்தியசாலையருகில் அமைந்துள்ள உணவகத்தின் மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இன்று அதிகாலை 12.10 அளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொல்லுகளுடன் கெப் ரக வாகனத்தில் வந்தவர்களே தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அரசியல் முரண்பாடொன்றே இந்தத் தாக்குதலுக்கு காரணமாக அமைந்துள்ளதாக சந்தேகம் நிலவுகின்றது.
சம்பவத்துடன் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கெப் ரக வாகனத்தையும் பொலிசார் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
தாக்குதலில் காயமடைந்த உணவக உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.