புதியவை

ஆஸ்திரியாவில் சாலையோரமாய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியிலிருந்து 71 சடலங்கள் மீட்பு

ஆஸ்திரியாவில் சாலையோரமாய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியிலிருந்து 71 சடலங்கள் மீட்பு

ஆஸ்திரியாவில் உரிமையாளர் எவருமற்ற நிலையில் சாலையோரமாய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றிலிருந்து 71 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஹங்கேரி நாட்டின் எல்லையில் உள்ள நெடுஞ்சாலையின் ஓரத்தில், கோழிகளை ஏற்றிச்செல்லப் பயன்படுத்தப்படும் லொறியொன்று நின்றுள்ளது.
லொறியிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்ததையடுத்து பொலிஸார் லொறியை சோதனை செய்துள்ளனர்.
இதன்போது லொறியிலிருந்து 71 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
லொறியிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் சிரிய நாட்டு அகதிகளுடையது என கூறப்பட்டுள்ளது.
பெண்களும் குழந்தைகளும் உயிரிழந்தவர்களில் உள்ளடங்குவதாகவும் தகவல்கள் வௌியாகியுள்ளன.
சட்டவிரோதமாக பயணிக்க முயன்றவர்களே இட நெருக்கடி மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோதமாகச் செல்வது அதிகரித்துள்ளது.
KP_405274_crop_640x480
Police-stand-in-fr_3420881b
_Austria-migrants_3420826b
5123

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.