புதியவை

தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகளை விடுவிக்கக் கோரி முற்றுகைப் போராட்டம்: 850 பேர் கைது

தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகளை விடுவிக்கக் கோரி முற்றுகைப் போராட்டம்: 850 பேர் கைது

திருச்சி சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையின் தமிழ் அகதிகளை விடுவிக்குமாறு கோரி முற்றுகைப் போராட்டம் நடத்திய தமிழர் வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்த 850 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள முகாம் சிறைகளை மூடி அதிலுள்ள இலங்கை அகதிகளை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழர் வாழ்வுரிமை கட்சி முற்றுகைப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்ததாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வருகைதந்த பெருந்திரளானவர்கள் திருச்சியில் திரண்டனர்.
இவர்கள் கொட்டப்பட்டியில் உள்ள அகதி முகாம் அருகில் இருந்து புறப்பட்டு திருச்சி மத்திய சிறைவரை பேரணி நடத்தியதாகவும் த ஹிந்து வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், திருச்சி மத்திய சிறை அருகில் பேரணியாக வந்தவர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார், 850 பேரைக் கைது செய்துள்ளனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.