புதியவை

ராஜபக்ஸவிற்கு வாக்களிப்பது எதற்கு என எனக்குத் தெரியவில்லை: சந்திரிக்கா

ராஜபக்ஸவிற்கு வாக்களிப்பது எதற்கு என எனக்குத் தெரியவில்லை: சந்திரிக்கா

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எம்பிலிப்பிட்டியவில் இன்று (11) இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இதன்போது அவர் தெரிவித்ததாவது;
ராஜபக்ஸ காலத்தில் பொலிஸார் தமது கடமைகளை முன்னெடுக்க அஞ்சினார்கள். ஏனென்றால், நாட்டில் இருந்த இரண்டு பிரதான போதைப்பொருள் கடத்தற்காரர்களையும் பாராளுமன்றத்திற்குக் கொண்டு வந்து பிரதியமைச்சர்களாக நியமித்திருந்தனர். இதற்குப் பின்னர் பொலிஸாரால் என்ன செய்ய முடியும்? எத்தனோல் விற்பனையில் ஈடுபடும் முக்கிய இருவர் மஹிந்தவின் அரசாங்கத்தில் இருந்தனர். ஒருவர் கைது செய்யப்பட்டு தற்போது தேர்தலில் போட்டியிடுகின்றார். வேட்பு மனு கோரி என்னிடம் வந்தனர். நான் விரட்டி விட்டேன். ராஜபக்ஸவிற்கு வாக்களிப்பது எதற்கு என எனக்குத் தெரியவில்லை.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.