புதியவை

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தன விளக்கமறியலில்

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தன விளக்கமறியலில்

தாக்குதல் சம்பவமொன்று தொடர்பில் முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தன இன்று (24) கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 14 ஆம் திகதி கம்பஹா நகரில் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தன உள்ளிட்ட நால்வர் இன்று (24) முற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.