புதியவை

மஹிந்தவின் பாதுகாப்பு குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க உத்தர

மஹிந்தவின் பாதுகாப்பு குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவு



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்த புலனாய்வு பிரிவு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, இன்று உயர்நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது. 

மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பினை குறைக்குமாறு உத்தரவிடும் படி, கோரி நவ சமசமாஜக் கட்சியின் சேனக பெரேரா மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். 

இந்த மனு இன்று பிரதம நீதியரசர் தலைமையிலான நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இதன்போது அரச புலனாய்வுப் பிரிவு மதிப்பீட்டு அறிக்கையின் பிரகாரமே மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அரச தரப்பு சட்டத்தரணி குறிப்பிட்டார். 

எனவே இது குறித்து தீர்மானிக்க தேர்தல்கள் ஆணையாளருக்கு முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

இந்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் 14ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ள உயர்நீதிமன்றம், அன்று குறித்த மனு தொடர்பில் மேலும் ஆராயவுள்ளதாக தெரிவித்தது. 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.