புதியவை

பாராளுமன்றத்தில் விசேட தகவல் வழங்கும் கரும பீடம்

பாராளுமன்றத்தில் விசேட தகவல் வழங்கும் கரும பீடம்

புதிய பாராளுமன்ற உறுப்பினர்களின் வசதி கருதி இன்று முதல் எதிர்வரும் 3 நாட்களுக்கு பாராளுமன்றத்தில் தகவல் வழங்கும் கரும பீடம் ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது .
8 ஆவது பாராளுமன்றத்தில் முதலாவது அமர்வின் முதலாவது கூட்டத் தொடரை முன்னெடுப்பதற்கு தேவையான ஒழுங்குகளை தயார் செய்வதன் நிமித்தம் இந்த கரும பீடம் ஸ்தாபிக்கப்படவுள்ளது.
இன்று முதல் நாளை மறுதினம் வரை காலை 9.30 முதல் மாலை 3.30 வரையான காலப்பகுதியில் பாராளுமன்ற கட்ட தொகுதிக்குள் குறித்த தகவல் வழங்கும் கருமபீடம் திறக்கப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது .
தேவையான தகவல்களை ஆவணப்படுத்துவதற்கு அ​னைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.