புதியவை

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பம்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பம்

வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று (19) காலை ஆரம்பமாகியுள்ளது.
நல்லூர் கந்தன் ஆலயத்தின் காலை பத்து மணிக்கு இடம்பெற்ற விசேட பூஜை வழிப்பாடுகளுடன் கொடியேற்ற திருவிழா இனிதே ஆரம்பமாகியது.
வள்ளி தெய்வானை சமேதராய் அலங்கார கந்தன் உள்வீதி வலம்வந்து குழுமியிருந்த அடியார்களுக்கு அருள்பாலித்தார்.
பல்லாயிரக்கனக்கான பக்தர்கள் புடைசூழ வேதியர்கள் மந்திரங்கள் முழங்க நல்லூர் ஆலயத்தின் கொடிறே்றம் இடம்பெற்றது.
நல்லூரானின் கொடியேற்ற திருவிழாவின் நிமித்தம் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.
இன்று ஆரம்பமாகியுள்ள மகோற்சவ பெருவிழா எதிர்வரும் 25 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.
24 ஆம் நாள் இரதோற்சவ திருவிழாவும் 25 ஆம் நாள் தீர்தோற்சவமும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.