புதியவை

மஹரச்சிமுல்லயில் மாணவி கடத்திக் கொலை: விரிவான விசாரணைகள் ஆரம்பம்

மஹரச்சிமுல்லயில் மாணவி கடத்திக் கொலை: விரிவான விசாரணைகள் ஆரம்பம்

அலவ்வை, மஹரச்சிமுல்ல பகுதியில் மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மஹரச்சிமுல்ல பகுதியில் தனது சகோதரனுடன் சென்றுகொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத சிலரால் மாணவி கடத்திச் செல்லப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
16 வயதான மாணவி ஒருவரே கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் விசாரணைகளை அடுத்து, சந்தேகத்தின் பேரில் பெண்ணொருவர் உட்பட இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.
அதே பகுதியைச் சேர்ந்த தோட்டமொன்றின் காவலாளி மற்றும் அவரின் மனைவியே சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அடையாளம் தெரியாத சிலரால் தனது சகோதரி கடத்திச் செல்லப்பட்டதாக அந்த மாணவியின் சகோதரன் செய்த முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.